திரு - வள்ளி - க் - கேணி


நம்ம கதையோட நாயகன் பேரு திரு முருகன். 

அவன் ஒரு சுமாரான பையன் எல்லாத்துலையுமே சுமார் தான். 

பள்ளியில் படிக்கும் போது வள்ளி னு ஒரு பொண்ணு, ரெம்ப அழகு.

திரு முருகன் ஒரு தலையா காதலிச்சுட்டு வந்தான்.

ஐந்து வருடுகளுக்கு பிறகு திருக்கு தைரியம் வந்து வள்ளியிடம் போய் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினான்.

வள்ளி அப்போது மருத்துவ படிப்பு படித்து கொண்டிருந்ததால் அவள் திருவின் காதலை மறுத்து விட்டாள் 

திரு முருகன் வள்ளியின் மருத்துவ படிப்பு முடியும் வரை காத்திருப்போம் என முடிவு எடுத்தான்.

ஆறு வருடங்களுக்கு பிறகு…

திரு முருகன் வள்ளியை சந்திக்க சென்றான்.

வள்ளியிடம் தன்னுடைய காதலை மறுபடியும் சொன்னான்.

வள்ளி பதில் ஏதும் சொல்லாமல் சென்று விட்டாள்.

திரு முருகனுக்கு ஒரு குழப்பம்.

அடுத்த நாள் திரு வள்ளியின் விடு இருக்கும் பகுதிக்கு சென்றான்.

அங்கே அவனுக்கு ஒரு அதிர்ச்சி.

வள்ளியின் திருமணம் அன்று.

அதன் பிறகு தான் அவனுக்கு தெரிய வந்தது.

வள்ளி அவளின் பள்ளி பருவத்தில் இருந்தே ஒருவரை காதலித்து.

இது தெரியாமல் தான் திரு முருகன் 11 வருடமாக காதலித்து கொண்டிருந்தான்.

திரு முருகனால் வள்ளியை மறக்க முடியவில்லை அதனால் அவன் திருமணமே செய்துகொள்ளவில்லை.

வள்ளியின் மகிழ்ச்சியான வாழ்க்கையை பார்த்து மிகவும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி வந்தான் திரு.

ஒரு நாள் வள்ளியின் கணவர் அவளிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

அந்த துக்கம் தாளாமல் வள்ளி அவள் வீடு கேணியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டால்.

வள்ளி தற்கொலை செய்து கொள்வது தூரத்திலிருந்து பார்த்து கொண்டு இருந்த திரு முருகன் அதே கேணியில் விழுந்து உயிரை மாய்த்து கொண்டான்.

இதை அறிந்த அந்த பகுதி மக்கள் திரு - வள்ளியின் காதலை பாராட்டி அந்த பகுதிக்கு திருவல்லிக்கேணி என பெயர் வைத்தனர்.

நன்றி !!!

Comments